Director Shankar indian 2 | Tamil cinema | Kamal Haasan | Shankar | Kollywood Live | Latest news | Kajal Aggarwal | director shankar

Director Shankar indian 2 : இந்தியன் 2 படத்தைத் தொடர்வதில் ஷங்கர் மற்றும் கமல், அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.

படத்தின் பட்ஜெட் பற்றியும் குழப்பமான சூழல் நிலவுவதால் இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா நிறுவனம், கிட்டத்தட்ட படத்தை கிடப்பில் போட்டுள்ளது.

நடிகர் கமலும் வேறு படத்தில் ஆர்வம் செலுத்தத் துவங்கி விட்டார். எனினும், தொடர்ந்து, நடிகர் கமலிடம் இந்தியன் 2 சம்பந்தமாக ஷங்கர் பேசி வருகிறார்.

நடிகர் கமல் அது தொடர்பாக, எவ்வித பிடிப்பும் கொடுக்காமல் பேசி வருவதால், ஷங்கர் அடுத்தகட்டம் நோக்கி பயணிக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் 2ஐ, நடிகர் கமலை வைத்து தமிழில் எடுக்க முடியாமல் போனால், அதே படத்தை அவர் ஹிந்தியில் எடுக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறுகின்றனர்.

அமீர்கான் அல்லது ஷாரூக்கான் இருவரில் ஒருவரை வைத்து, இந்தியில் இந்தியன் 2ஐ எடுக்க பிரபல நிறுவனங்களிடம் ஷங்கர் பேசிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷாவின் அடுத்த பட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்!

ஆதித்ய வர்மா ஷூட்டிங் – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!